இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரி பிளவை ஏற்படுத்தியது என்றும், உக்ரைனின் பிரச்சினை ஐரோப்பாவின் பிரச்சினை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஃபொக்ஸ் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த டொனால்ட் ட்ரம்ப், “செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவது எளிதாக இருக்கும் என்று நினைத்தேன்.
சமரசம் ஏற்பட வேண்டுமானால் இரு தரப்புக்கும் அதில் ஒரே நேரத்தில் ஆர்வம் இருக்க வேண்டும். புடினுக்கு ஆர்வம் இருக்கும்போது ஜெலன்ஸ்கிக்கு இல்லை. ஜெலன்ஸ்கிக்கு ஆர்வம் இருக்கும்போது புடினுக்கு இல்லை.
தற்போது போரை முடிவுக்குக் கொண்டு வர ஜெலன்ஸ்கி விரும்புகிறார். ஆனால், புடின், கேள்விக்குறியாக இருக்கிறார். புடினுடன் எனக்கு எப்போதும் சிறந்த உறவு இருந்தது. இது நான் தீர்க்காத ஒரே போர் ஆகும்.
போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் வங்கிகளுக்கு எதிரான தடைகள், எண்ணெய் ஏற்றுமதிக்கு அதிக வரி விதிப்பு ஆகியவற்றை நான் ஏற்கனவே செய்துவிட்டேன். நான் நிறைய செய்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.