16.4 C
Scarborough

டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டி; ஒற்றையர் பிரிவில் இந்தியா முன்னிலை

Must read

டேவிஸ் கிண்ண டென்னிஸ் போட்டியின் உலக குழு சுற்றில் இந்தியா-சுவிட்சர்லாந்து அணிகள் இடையிலான ஆட்டம் சுவிட்சர்லாந்தின் பியல் நகரில் நேற்று தொடங்கியது.

இதில் ஒற்றையர் பிரிவின் முதலாவது ஆட்டத்தில் தரவரிசையில் 626-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் தக்ஷினேஸ்வர் சுரேஷ். 155-வது இடத்தில் இருக்கும் ஜெரோம் கிம்மை (சுவிட்சர்லாந்து) எதிர்கொண்டார்.

சென்னையை சேர்ந்த தக்ஷினேஸ்வர் 7-6 (7-4). 6-3 என்ற நேர்செட்டில் ஜெரோம் கிம்முக்கு அதிர்ச்சி அளித்தார்.

25 வயதான தக்ஷினேஸ்வர் இந்திய அணிக்காக அறிமுகமான முதல் போட்டியிலேயே அசத்தியுள்ளார்.

மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் நாகல் 6-3, 7-6 (4) என்ற செட் கணக்கில் மார்க் ஆன்ட்ரியா ஹஸ்லெரை வீழ்த்தினார்.

இதனால் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்று இரட்டையர் ஆட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article