டொராண்டோவின் பார்க்சைட் டிரைவில் உள்ள ஒரு வாகனங்களின் வேகத்தை கண்காணிக்கும் கேமரா ஒரு வருடத்திற்குள் ஏழாவது முறையாக துண்டிக்கப்பட்டுள்ளது.
2022 முதல் 66,000 டிக்கெட்டுகள் மற்றும் $7 மில்லியன் அபராதம் விதித்த போதிலும், கேமரா மீண்டும் மீண்டும் சேதப்படுத்தப்பட்டு, வருவதோடு வாரக்கணக்கில் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேகப் பிரச்சினைகளைத் தீர்க்க விசேட பாதுகாப்பு மற்றும் வீதி மறுவடிவமைப்பு முறையை நடைமுறைப்படுத்துமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் கேமரா சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகின்றது.
பாதுகாப்பற்ற வீதியில் வேக வரம்பை மீறும் வாகனங்களைக் கண்டறிந்து பதிவு செய்ய ரேடார் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப்படும் சாதனமான வேக கேமரா, வேகமாகச் செல்லும் வாகனத்தின் படங்கள் அல்லது வீடியோவை, அதன் உரிமத் தகடு உட்பட, படம்பிடிக்கிறது.
இதனூடாக வாகனத்தை செலுத்திய சாரதிக்கு அபராதம் விதிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

