தனது அடுத்த படத்தின்(“எஸ்டிஆர்49”) அப்டேட் இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என இயக்குனர் வெற்றிமாறன் கூறி இருக்கிறார்.
சிம்புவோடு இணைந்துள்ளதாக அறிவித்திருந்த வெற்றிமாறன். படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பித்த நிலையில் சிறிது இடைவெளி ஏற்பட, படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் வதந்தி பரவியது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெற்றிமாறன் “வடசென்னை 2”, மற்றும் “எஸ்டிஆர் 49″பற்றிய தகவலை கொடுத்தார்.
“எனது அடுத்த படத்தின் அப்டேட் (எஸ்டிஆர் -49) இன்னும் 10-15 நாட்களில் வெளியாகும். அது முடிந்ததும், தனுஷின் வடசென்னை-2 படத்தைத் தொடங்குவேன் என்றார். இது சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.