13.1 C
Scarborough

எல்லாம் மறந்து விட்டதா ?விஜய்யை சாடிய ரஞ்சித்

Must read

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21 ஆம் திகதி மதுரையில் நடபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய், மத்தியில் ஆளும் பாஜக மற்றும் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுகவை கடுமையாக விமர்சித்தார். பிரதமர் மோடி மற்றும் மு.க ஸ்டாலினையும் விமர்சித்து பேசியிருந்தார். விஜய்யின் பேச்சு அரசியல் நாகரீகத்துடன் இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், நடிகர் ரஞ்சித்தும் விஜய்யை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். ரஞ்சித் பேசுகையில், “சமீபத்தில் மதுரை மாநாட்டில் பேசிய விஜய், நான் உச்சத்தில் இருக்கும் போது வந்தவன். பிழைப்பு தேடி வரவில்லை என பேசியிருக்கிறார். விஜய், யார சொல்ற எம்ஜிஆரையா, ஜெயலலிதாவையா இல்ல அன்பு அண்ணன் விஜயகாந்தையா, இல்ல கமல் ஹாசனையா?. எனக்கு என்னமோ கமல்ஹாசன நேரடியாக சொல்ல முடியாமல் இப்படி சொல்லிருயிருப்பார் என்று நினைக்கின்றேன் .

பிழைப்பு தேடி அரசியல் செய்றவர் என்பது அவருக்குத்தான் சரியா இருக்கும். விஜய் சொடக்கு போட்டு மோடி ஜீ-னு சொல்கிறார். 2014 ஏப்ரல் 16-ல் கொடிசியாவில் மோடி முன்பு பூனை மாதிரி பம்மிட்டு உட்கார்ந்து இருந்திங்களே… அன்னைக்கு எதுக்கு வந்து பார்த்தீங்க, கச்சத்தீவ மீட்கவா? தலைவா படம் ஓடணும்னு வந்து பார்த்தீங்க. பழச எல்லாம் மறந்துட்டீங்களா?” என்று பேசியுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article