17.8 C
Scarborough

19 வயது இளைஞனின் உயிரிழப்பு, கொலை என அறிவிப்பு

Must read

அண்மையில் ஸ்கார்பரோ மத்திய பகுதியில் பதிவான 19 வயது இளைஞனின் உயிரிழப்பு கொலையாகக் கருதப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர் 19 வயது டேனியல் அமலாதாஸ் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை பிற்பகல் உணவகம் அருகே அமைந்துள்ள கழிப்பறைக்குள் அமலாதாஸ் மயக்கமடைந்திருப்பதை ஒரு கடைக்காரர் கண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

19 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அமலாதாஸ் கொலை இந்த ஆண்டின் நகரத்தின் நடந்த 27வது கொலையாக பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நபருக்கு பிற்பகல் 2 மணிக்கு சற்று முன்பு அழைப்பு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘இந்த கொலை யாருக்கும் தெரியாத மிகவும் வரையறுக்கப்பட்ட இடத்தில் நடந்துள்ளதோடு ஒரே ஒரு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது’ என்று பதில் ஆய்வாளர் பஹீர் சர்வானந்தன் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

அமலதாஸை அதிகாரிகள் கண்டுபிடித்தபோது, ​​அவருக்கு அருகில் ஒரு துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

எனினும் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

கொலை விசாரணை அதிகாரிகள், காணொளி உட்பட தகவல்களைக் கொண்ட எவரையும் 416-808-7400 என்ற எண்ணில் அல்லது க்ரைம் ஸ்டாப்பர்ஸ் என்ற பெயர் குறிப்பிடாது 416-222-TIPS (8477) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article