16.1 C
Scarborough

சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து நியூயோர்க்கில் விபத்து

Must read

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியர்கள் உள்பட 54 பேர் நையாகரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாவுக்காக சென்றுள்ளனர். அவர்கள் சுற்றுலா கொண்டாட்டங்களை முடித்து விட்டு நியூயோர்க் நகருக்கு பேருந்தில் திரும்பி கொண்டிருந்தனர்.

இதன்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், நெடுஞ்சாலையில் கவிழ்ந்துள்ளது.

நியூயோர்க்கின் பப்பல்லோ நகருக்கு 40 கி.மீ. கிழக்கே பெம்புரோக் என்ற இடத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக மாகாண பொலிஸ் உயரதிகாரியான மஜ் ஆண்ட்ரே ரே ஊடக சந்திப்பின்போது உறுதிப்படுத்தி உள்ளார்.

எனினும், பேருந்து எதனால் சாரதியின் கட்டுப்பாட்டை விட்டு சென்றது போன்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை. அந்த பேருந்தில் 1 முதல் 74 வயது வரையுடைய பயணிகள் பயணம் செய்துள்ளனர். பஸ் விபத்தில் சிக்கியதும் பலர் அதில் இருந்து தூக்கி எறியப்பட்டனர்.

இந்த சம்பவத்தில்,பாதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையியல் விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு இதற்கு சாரதி ஒத்துழைப்பு வழங்கி வருவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article