16.1 C
Scarborough

விஜய் அரசியல் பற்றி பேசிய டி.ராஜேந்தர்

Must read

விஜய்யின் கட்சியானதமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடந்து முடிந்துள்ள நிலையில் விஜயின் அரசியல் வருகை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு டி. ராஜேந்தர் பதிலளித்து பேசும்போது, விஜய் என்னுடைய நண்பர். திரையுலகில் மறைந்து விட்ட விஜயகாந்த் எனது மிகப்பெரிய நண்பர், அவரது ‘சட்டம் சிரிக்கிறது’, ‘கூலிக்காரன்’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவன் நான்.

ஆனால் அரசியல் தளத்தில் சில பத்திரிகைகள் செய்த வேலையால் எங்கள் இருவரின் நட்பு உடைந்தது. அதன்பின்னர் எங்கள் இருவரையும் சேர்த்து வைத்தவர் என் மகன் சிலம்பரசன். அப்போது என் மகன் என்னிடம் சொன்ன ஒரு காரணத்திற்காக நான் ஒரு முடிவு செய்தேன்.

எக்காரணம் கொண்டும் இந்த அரசியலுக்காக எனது திரையுலக நட்பை இழக்க கூடாது என்பதே அந்த முடிவு. அது சூப்பர்ஸ்டார் ‘ரஜினியாகவோ, சூப்பர் எக்டர் கமலாகவோ, நம்முடைய இளைய தளபதி விஜயாகவோ இருக்கலாம். என்னுடைய அரசியலுக்காக நான் யாரையும் இழக்க விரும்பவில்லை என்று டி.ராஜேந்தர் கண்கலங்கியபடி கூறினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article