கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் நடைபெற்று வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் ஹன்னே வாண்டவிங்கெல் (பெல்ஜியம்) -பிரிசில்லா ஹான் (அவுஸ்திரேலியா) ஆகியோர் மோதினர்.
இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய பிரிசில்லா ஹான் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஹன்னே வாண்டவிங்கெல்லை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.