17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் திகதி முதல் 28-ந்திகதி வரைடு டுபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி’ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இலங்கை.வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், இந்த தொடருக்கான ஹொங்கொங் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு யாசிம் முர்தாசா அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹொங்கொங் அணியின் துணை தலைவராக பாபர் ஹயாத், மற்றும் ஜீஷன் அலி (விக்கெட் கீப்பர்), நியாசகத் கான் முகமது, நஸ்ருல்லா ராணா, மார்ட்டின் கோட்ஸி, அன்ஷுமன் ராத், எஹ்சான் கான், கல்ஹான் மார்க் சல்லு, ஆயுஷ் ஆஷிஷ் சுக்லா, முகமது அய்சாஸ் கான், அதீக் அட்ச்சி உபால், அதிக் உபால் மெஹ்மூத், அனஸ் கான், ஹாருன் முகமது அர்ஷாத், அலி-ஹாசன், ஷாஹித் வாசிப் (விக்கெட் கீப்பர்), கசன்பர் முகமது, முகமது வஹீத் ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.