10,000க்கும் மேற்பட்ட விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் ஏர் கனடா தனது விமான சேவையை நிறுத்தியுள்ளது.
புதிய ஒப்பந்தத்தில் விமான நிறுவனமும் தொழிற்சங்கமும் உடன்படாத காரணத்தால் இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுகின்றது.
இதனால் அனைத்து ஏர் கனடா விமான பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன, இதனால் தினமும் சுமார் 130,000 பயணிகள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பயணிகள் எதிர்கால பயணத்திற்கான மறுபதிவு செய்யலாம் அல்லது செலுத்திய தொகையை மீள பெறலாம் என ஏர் கனடா தெரிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தத்தால் ஒவ்வொரு நாளும் 25,000 கனடியர்கள் வெளிநாடுகளில் சிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிறுவனம் தினமும் சுமார் 700 விமானங்களை இயக்கி வந்த நிலையில் ஒப்பந்தம் எட்டப்படாத காரணத்தினால் அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.