கிழக்கு ஒன்ராறியோவில் நடந்த “ரயில் சறுக்கல்” சம்பவத்தைத் தொடர்ந்து மிசிசாகாவைச் சேர்ந்த 23 வயது நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் வடக்கு க்ளென்காரி டவுன்ஷிப்பில் டோர்னி வீதிக்கு கவுண்டி வீதி 30க்கும் இடையிலான தண்டவாளத்தில் ரயில் நிறுத்தப்பட்டிருந்ததோடு அவர்களின் முறைப்பாட்டுக்கு ஸ்டோர்மாண்ட், டன்டாஸ் மற்றும் க்ளென்காரி ஓபிபி பதிலளித்துள்ளது.
ரயில் நகர்ந்து கொண்டிருந்த போது ஒருவர்அதன் மேல் சவாரி செய்து கொண்டிருந்ததாக வந்த தகவலைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.
அந்த நபர் கைது செய்யப்பட்டு தவறான நடத்தை மற்றும் லைன் வேலை அமைந்துள்ள நிலத்திற்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் கார்ன்வாலில் உள்ள ஒன்ராறியோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.