அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS செண்டா பார்பரா’ கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த நிலையில் இலங்கை கடற்படையினர் வரவேற்பு அளித்துள்ளனர்.
குறித்த கப்பல் அதன் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இன்று (16) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பலானது 127.6 மீட்டர் நீளம் கொண்டதுடன் குறித்த கப்பலின் தளபதியாக A.J.OCHS செயற்படுகின்றார்.
‘USS செண்டா பார்பரா’ கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அதன் குழுவினர் இலங்கையின் முக்கிய இடங்களை பார்வையிடவுள்ளதுடன் குறித்த கப்பல் எதிர்வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்படவுள்ளது.
இதேநேரம் ஓகஸ்ட் 14 முதல் 18 வரை நடத்த திட்டமிடப்பட்ட இலங்கை இந்திய கடற்படைப் பயிற்சியின் (SLINEX-25) 12வது பதிப்பில்பங்கேற்க இந்திய கடற்படைக் கப்பல்களான INS ராணா (ஒரு வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல்) மற்றும் INS ஜோதி (கப்பல் டேங்கர்) கொழும்பை வந்தடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.