23.4 C
Scarborough

150 கோடிகளை குவித்த ‘மகா அவதார் நரசிம்மா’

Must read

இந்து கடவுள் விஷ்ணுவை மையமாக வைத்து புராண திரைப்படமாக உருவான படம் மகா அவதார் நரசிம்மா அஸ்வின் குமார் இதனை இயக்கி இருந்தார்.

கேஜிஎப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் இதனை தயாரித்துள்ளது.

இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். அனிமேஷனில் வரும் காட்சிகள் உலகத் தரத்தில் இருப்பதாக சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை விவரிக்கும் வகையில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளன.

இந்நிலையில், இந்தப் படத்தின் வசூல் குறித்த விவரத்தை தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை இந்திய மதிப்பில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article