சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தப்பட்ட 600 வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த வெளிநாட்டவர் ஒருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ரோட்டுண்ட கார்டன்ஸ் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த சிகரெட் தொகை கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 40 வயதுடைய சீன நாட்டவர்.
சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.