இன்று தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்களாதேஷ் அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
முதல் போட்டி ஷேர் பங்களா தேசிய மைதானத்தில், இலங்கை நேரப்படி மாலை 4:30 மணிக்கு நாணய சுழட்சி இடம்பெற்று , மாலை 5:00 மணிக்கு போட்டி தொடங்கும்.
இதேநேரம் புதிய பயிற்சியாளர் மைக் ஹெஸனுடன் பாகிஸ்தான் இளம் அணி களம் இறங்குகிறது. இந்த அணியில் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க டி20 தொடரை வென்ற நிலையில், லிட்டன் தாஸ் மற்றும் பங்களாதேஷ் அணிஇன்று தொடங்கி மூன்று டி20 போட்டிகளில் பாகிஸ்தானுடன் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.