பிராட்பிட் நடித்த ‘எஃப் 1’ மற்றும் ‘ஜுராசிக் வேர்ல்ட் – ரீபெர்த்’ ஆகிய படங்கள் இந்தியாவில் நல்ல வசூல் செய்து வருகின்றன. குறிப்பாக ‘எஃப் 1’ திரைப்படம் ஐமேக்ஸ் திரையரங்குகளில் தொடர்ச்சியாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது. மேலும், இதர மொழிகளில் வெளியான படங்கள் எதுவுமே பெரிய அளவுக்கு வசூலில் வரவேற்பைப் பெறவில்லை.
தமிழில் ‘மாமன்’ படத்துக்குப் பிறகு எந்தவொரு படமும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் அனைத்து திரையரங்க உரிமையாளர்களு ஆகஸ்ட் 14-ம் திகதி வெளியாகவுள்ள ‘கூலி’ படத்துக்காக காத்திருக்கிறார்கள். அப்படம் கண்டிப்பாக பெரியளவில் வசூல் இருக்கும் என்பது அனைவருடையஎதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்தியாவில் ‘ஜுராசிக் வேர்ல்ட் – ரீபெர்த்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்து பெரும் சாதனை புரிந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.