பாகிஸ்தானில் உலோகத் தொழிற்சாலை அமைப்பதற்காக மாஸ்கோவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பாகிஸ்தான்-ரஷ்யா இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தத் திட்டம் உலோகஉற்பத்தியை மீண்டும் தொடங்கி விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகவும், இது இருதரப்பு ஒத்துழைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாகவும் அமைவதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் உதவியுடன கட்டப்பட்ட பாகிஸ்தான் உலோகத் தொழிற்சாலை ஒப்பந்தத்திற்காக சீனாவும் போட்டியிட்டது.
பாகிஸ்தானில் சீன நிறுவனங்கள் மூலம் உலோகச் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.