இந்திய திரை உலகில் பிரபல பாடகியாக இருப்பவர் ஸ்ரேயா கோஷல். பல்வேறு இடங்களில் தனது பாடலால் இசை ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் ஸ்ரேயா கோஷல் சமீபத்தில் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் ஒரு நிறைமாத கர்ப்பிணி பெண் கணவருடன் பங்கேற்றார். அவரைக் கண்டதும் அருகில் சென்ற ஸ்ரேயா கோஷல் மண்டியிட்டபடி வயிற்றில் வளர்ந்து வரும் குழந்தைக்காக ஒரு பாடலை பாடத் தொடங்கினார்.
முதல் வரியை பாடியதும் குழந்தை அசைய தொடங்கியது. இதைக் கண்ட ஸ்ரேயா கோஷலுக்கு மேலும் உற்சாகம் எழுந்தது. உற்சாகத்தில் குழந்தையை நோக்கி மேலும் பாடத் தொடங்கினார். ஒவ்வொரு வரிகளுக்கும் குழந்தை நடனம் ஆடுவது போல் வயிற்றுக்குள்ளே இருந்து குழந்தையின் அசைவு வெளிப்பட்டது.
இதையடுத்து ஸ்ரேயா கோஷல் எல்லாம் நன்றாக இருக்கிறது என வயிற்றைத் தொட்டு பாடலை பாடி முடித்தார். பாடலைக் கேட்டு கர்ப்பிணி பெண்ணும் அவரது கணவரும் மகிழ்ச்சியால் ஆனந்த கண்ணீர் ததும்ப துள்ளி குதித்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.