கனடாவின் ஹமில்டனில் உள்ள லிங்கன் அலெக்ஸாண்டர் வீதியில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு டிரக் வண்டி மோதியதில் 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் தனது டொயோட்டா யாரிஸ் காரில் பயணம் செய்து,அதிலிருந்து இறங்கிய பிறகு குறித்த டிரக் அவர் மீது மோதியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மோதிய டிரக் சாரதி விசாரணைகளுக்கு பொலிஸாருடன் ஒத்துழைத்து வருகிறார்.
சம்பவ நேரத்தில் அந்தப் பகுதியில் சென்ற சாரதிகள் தங்கள் டாஷ் கேம்கள் (dash cams) மூலம் ஏதேனும் சாட்சியங்கள் உள்ளதா என்பதை சரிபார்க்க பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தகவல்கள் தெரிந்தவர்கள் 905-546-4753 என்ற எண்ணிலும், இரகசியமாக தகவல்களை வழங்க விரும்புவோர் 1-800-222-8477 என்ற Crime Stoppers எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.