இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 45.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில் 249 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 232 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.
இதன்படி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1 – 1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளது.