முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட 4000 பேரின் உடல்கள் இருப்பதாக கூறி குறித்த பகுதிக்கு சென்ற அருண் சித்தார்த் என்ற நபர் பொதுமக்களால் பகிரங்கமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
தமிழ் தேசியத்துக்கு எதிராக செயற்பாடுகளை அவர் முன்னெடுப்பதாகவும் பதியப்படாத அமைப்பொன்றை அவர் இயக்கிவருவதாகவும், அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் செம்மணி புதைக்குழி விவகாரத்தை திசை திருப்ப பொய்யான குற்றச்சாட்டோடு துணுக்காய் பகுதிக்கு சென்ற அவர் தற்போது பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.