கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தி முதல் முறையாக உலக நிஞ்ஜா லீக் சாம்பியன்ஷிப் 2025 இல் பங்கேற்ற ஒன்டாரியோ – அக்டன் (Acton, Ontario) பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமி எல்லா கிரிச்ச்லோ-மைங்குய் (Ella Crichlow-Mainguy), தனது பிரிவில் வெற்றி பெற்று ‘மேச்சியூர் கிட்ஸ்’ சாம்பியனாகியுள்ளார்.
அமெரிக்காவின் கிரீன்ஸ்பரோ (Greensboro, N.C) நகரில் கடந்த ஜூன் 19–23 திகதிகளில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொள்ள, விமான தாமதம் மற்றும் ஏனைய பிரச்சனைகளுக்கு மத்தியில் தடைகளை கடந்து வந்தும் நேரத்தில் வந்தும் வெற்றி பெற்றார்.
நிஞ்ஜா விளையாட்டு என்பது சக்தி, சமநிலை மற்றும் பிடிப்புத் திறனை சோதிக்கும் பலதரப்பட்ட தடைகளை கொண்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக வாரத்தில் இருமுறை பயிற்சி செய்து வந்த எல்லா, தன்னுடைய வீட்டின் பின்னால் நிஞ்ஜா பயிற்சி அமைப்பும் வைத்துள்ளார்.
போட்டியின் அனைத்து கட்டங்களையும் சாத்தியமாக கடந்த எல்லா, கனடாவின் முதல் Mature Kid Female World Champion என்ற பெருமையை பெற்றார்.
அடுத்து, அதிக சவால்களுடனான preteen பிரிவில் 2026-ஆம் ஆண்டு போட்டியிட தயார் நிலையில் உள்ளார் எல்லா.