தெற்கு லெபனானின் பரந்த பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான தீவிர வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து ஒருவர் கொல்லப்பட்டதோடு 11பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலிய தாக்குதல்களை லெபனான் பிரதமர் நவாஃப் சலாம் கடுமையாகக் கண்டித்து எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் இஸ்ரேலின் இத்தாக்குதல் லெபனானின் தேசிய இறையாண்மையையும் நவம்பரில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஏற்பாடுகளையும் அப்பட்டமாக மீறுவதாகக் கூறினார்.