உணவுக்காக உதவி விநியோக தளம் அருகே காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி 23 பலஸ்தீனியர்களைக் கொன்றதாக சாட்சிகளும் வைத்தியர்களும் தெரிவித்தனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளையின் (GHF) மத்திய காசாவில் உள்ள ஒரு விநியோக மையத்திற்கு அருகில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீது தாங்கிகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் சுட்டதாக சாட்சிகளும் மருத்துவர்களும் தெரிவித்தனர்.
இதனிடையே அருகில் கூடியிருந்த மக்களுக்கு தாக்குதல் இடம்பெறவுள்ளமை குறித்து எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்தன.
எவ்வாறாயினும் காசா மனிதாபிமான அறக்கட்டளை அதன் தளங்களுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை மறுத்துள்ளது.
மே மாத இறுதியில் இருந்து இதேபோன்ற சம்பவங்களில் 400 க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும் ஆயுதமேந்திய உள்ளூர் துப்பாக்கிதாரிகள் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் செய்திகள் வந்துள்ளன.