இந்தியாவின் பரமக்குடியில் உள்ள 92 வயதான மூதாட்டியை கொலை செய்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணும் அவரது மகனும் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக செயற்பட்டவரே இவ்வாறு ஆதாயத்திற்காக வயோதிப பெண்ணை கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
வயோதிப பெண் உயிரிழந்த நிலையில் அது குறித்து கொலை செய்த பெண் உறவினர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். மரணத்தை சந்தேகித்த உறவினர்கள் காவல் துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து பரமக்குடி நகர காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மூதாட்டியின் வீட்டில் இருந்து சுமார் 7.5 பவுன் தங்க நகைகள் காணாமல் போனமை தெரியவந்தது.
பணிப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவர் இரவில் மூதாட்டியைக் கொன்று, அவரது மகனிடம் (36) என்பவரிடம் தங்க நகைகளைக் கொடுத்தமை தெரியவந்தது.
இதனையடுத்து அந்தப் பெண்ணையும் மகனையும் கைது செய்த பொலிஸார் நகைகளை மீட்டுள்ளனர்.