இந்தியாவின் மஹாராஷ்டிராவில் உள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு ஏனையோரை மீட்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் குறித்த இரும்பு பாலத்தின் அடியில் ஓடும் இந்திரயானி நதியிலிருந்து மீட்கப்பட்ட ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், ஏனையோர் தேடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 15:30 மணியளவில் குறித்த பாலம் இடிந்த போது , ஒரு பெரிய மக்கள் கூட்டம் பாலத்தைக் கடந்து கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை அடுத்து இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், “நிவாரணப் பணிகள் உடனடியாக முடுக்கிவிடப்பட்டுள்ளன” என்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் குறிப்பிட்டுள்ளார்.