நாடளாவிய டொலொராமா Dollarama விற்பனை நிலையத்தில் செய்யப்பட்ட ஒரேகெயார் பேபி பிரஸ் Oracare Baby Brush எனும் சிறுவர் பற்தூரிகை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சுகாதார திணைக்களம் இது தொடர்பிலான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த பற்தூரிகை தயாரிப்பு குறைபாடுடன் இருப்பதாகவும், அது இரண்டு துண்டுகளாக முறிந்து குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு குறைபாடு குறித்து ஒரு நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகளைப் பெற்றதாக டொலொராமா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இதுவரை மூச்சுத்திணறல் சம்பவங்கள் எதுவும் டொலொராமா அல்லது கனடா சுகாதார துறைக்கு பதிவாகவில்லை. இத்தகவலை அடுத்து, இப்பொருளை இனி இறக்குமதி செய்யவோ, விற்பனை செய்யவோ மாட்டோம் என Dollarama நிறுவனம், அறிவித்துள்ளது.
இவ்வகை பற்தூரிகை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. பயன்படுத்தியதில் காயம் ஏற்பட்டிருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை தொடர்ந்து கண்காணிக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.