தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா தற்போது ‘தி கேர்ள் பிரண்ட்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.
ராகுல் ரவீந்திரன் இயக்கும் இப்படத்துக்கு அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்தில் தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், படத்தின் வெளியீடு குறித்து அப்டேட் கொடுத்துள்ள ராஷ்மிகா, பட பணிகளை துரிதப்படுத்தி விரைவில் வெளியிடுவோம் என்று கூறி இருக்கிறார்.
இவேளை, ராஷ்மிகா ‘தாமா’ என்ற ஹிந்தி ஹாரர் படத்திலும், தமிழில் தனுஷுடன் ‘குபேரா’ படத்திலும் நடிக்கிறார். ‘குபேரா’ படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.