ஸ்பானிய லா லிகா கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் முன்களவீரரான றபீனியாவை கழகத்தில் எதிர்வரும் 2028ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை வைத்திருக்கும் புதிய ஒப்பந்தம் தொடர்பாக அவருடன் பார்சிலோனா இணங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு பார்சிலோனாவில் இணைந்த 28 வயதான றபீனியாவின் பார்சிலோனாவுடனான ஒப்பந்தமானது எதிர்வரும் 2027ஆம் ஆண்டுடன் முடிவடைவதாக முன்னர் காணப்பட்டிருந்தது.
நடப்புப் பருவகாலத்தின் 56 போட்டிகளில் 34 கோல்களைப் பெற்ற றபீனியா, 25 கோல்களைப் பெறுவதற்கு உதவியிருந்தார்.