ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான ஆர்.பி லெய்ப்ஸிக்கின் முன்களவீரரான ஸ்கெவி சிமொன்ஸைக் கைச்சாத்திடுவது குறித்து இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் கருத்திற் கொள்வதாகக் கூறப்படுகிறது.
இன்னொரு புண்டெலிஸ்கா கழகமான பயெர் லெவர்குசனின் மத்தியகளவீரரான புளோரியன் ரிட்ஸையும் கைச்சாத்திட லிவர்பூல் முயல்கிற நிலையில் ரிட்ஸைக் கைச்சாத்திடுவதை விட சிமொன்ஸைக் கைச்சாத்திடுவது இலாபம் என்று நோக்கப்படுகிறது.