13.5 C
Scarborough

போர்த்துக்கல் குழாமில் ரொனால்டோவின் மகன்!

Must read

போர்த்துக்கல்லின் 15 வயதுக்குட்பட்டோருக்கான குழாமுக்காக முதற்தடவையாக கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகனான கிறிஸ்டியானோ ஜூனியர் புதன்கிழமை (07) அழைக்கப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவிலுள்ள அல்-நஸார் இளைஞர் அகடமியிலுள்ள 14 வயதான முன்களவீரரான ஜூனியர், இம்மாதம் குரோஷியாவில் நடைபெறவுள்ள தொடரொன்றுக்காக போர்த்துக்கல்லுடன் இணைந்து ஜப்பான், கிரேக்கம், இங்கிலாந்தை முதன்முறையாக எதிர்கொள்ளவுள்ளார்.

ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட், இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் இளைஞர் கழகங்களுக்காக ஜூனியர் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜுவென்டஸில் ஜூனியர் 58 கோல்களைப் பெற்றிருந்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article