நாப்போலி சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்ட்ரே-பிராங்க் ஸம்போ அங்குய்ஸா பெற்றதோடு, பொலொக்னா சார்பாகப் பெறப்பட்ட கோலை டான் என்டோயி பெற்றிருந்தார்.
சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 68 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் காணப்படுகின்றது. 65 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நாப்போலியும், 58 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் அத்லாண்டாவும் காணப்படுவதோடு, 57 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் பொலொக்னா காணப்படுகின்றது.