17.6 C
Scarborough

பங்களாதேஷ் அணியின் முன்னாள் அணித் தலைவர் தமீம் இக்பாலுக்கு நெஞ்சுவலி – வைத்தியசாலையில் அனுமதி

Must read

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் தமீம் இக்பாலுக்கு கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் களத்தில் சுருண்டு விழுந்தார். 36 வயதான தமீம் இக்பால், அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் தமீம் இக்பால் விளையாடினார். முஹம்மதின் ஸ்போட்டிங் கிளப் அணிக்கு தலைமை தாங்கிய தமீம் இக்பால் சைன்புகூர் கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிராக விளையாடினார்.

அப்போது களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமீம் இக்பால், திடீரென்று களத்தில் நிற்க முடியாமல் அமர்ந்துவிட்டார். இதனையடுத்து அங்கிருந்து மருத்துவர்கள் தமீம் இக்பாலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இதனையடுத்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அம்புயூலன்ஸ் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை மருத்துவ நிபுணர் டெபாசிஸ் சவுத்ரி, தமீம் இக்பாலுக்கு கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இசிஜி எடுக்கப்பட்டது. அவருக்கு இதயத்தில் சில பிரச்சினை இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

அவருடைய உடல் நலம் தற்போது எப்படி இருக்கிறது என்று இனி தான் தெரியவரும். முதலில் அவருக்கு இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது தமக்கு உடல்நலம் சரியில்லை என்றும் டாக்காவுக்கு செல்ல விரும்புவதாகவும் கூறினார்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article