ஐரோப்பிய இருபதுக்கு 20 ப்ரீமியர் லீக் என்ற புதிய வகையான கிரிக்கெட் தொடருக்கான அறிவிப்பை போட்டி ஏற்பாட்டாளர்கள் நேற்று (18) வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அனுமதிக்கப்பட்ட ஆறு அணிகள் பங்குபற்றும் 33 போட்டிகளை கொண்ட இந்த தொடர் நெதர்லாந்து மற்றும் அயர்லாந்தில் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகியவற்றின் தேசிய கிரிக்கெட் சபைகளை ஒன்றிணைத்து இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் தலா இரண்டு அணிகள் இந்த தொடரில் இடம்பெறும் எனவும் அணியொன்றில் எட்டு உள்நாட்டு வீரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதனையும் உள்ளூர் திறமைகளை வளர்ப்பதனையும் நோக்கமாகக் கொண்டு இந்த கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய நடிகர் அபிஷேக் பச்சன் இந்த லீக்கின் விளம்பர தூதுவராகவும் இணை நிறுவுனராகவும் உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.