19.9 C
Scarborough

லாரெஸ் உலக விளையாட்டு விருதுக்கான பரிந்துரைகள் வெளியீடு ; இந்திய இளம் கிரிக்கெட் வீரருக்கும் இடம்

Must read

ஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் சாதிக்கும் வீர, வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டுவரும் லாரெஸ் உலக விளையாட்டு விருது விழா ஏப்ரல் 21ஆம் திகதி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெறவுள்ள நிலையில் வழங்கப்படும் விருதுகளுக்கான பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. 8 பிரிவுகளில் குறித்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இதன்படி இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த வீரருக்கான விருது பிரிவில் டென்னிஸ் வீரர் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), உலக போல்வால்ட் சாதனை வீரர் மோன்டோ டுப்பிளான்டிஸ் (சுவீடன்), நீச்சல் வீரர் லியோன் மார்சந்த் (பிரான்ஸ்), சைக்கிளிங் வீரர் தடேஜ் போகாகர் (சுலோவேனியா), பார்முலா1 கார்பந்தய சாம்பியன் வெர்ஸ்டப்பென் (நெதர்லாந்து) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சிறந்த வீராங்கனைக்கான போட்டியில் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனை சபலென்கா (பெலாரஸ்), உதைபந்து வீராங்கனை போன்மதி (ஸ்பெயின்), ஜிம்னாஸ்டிக்ஸ் சாதனை மங்கை சிமோன் பைல்ஸ் (அமெரிக்கா) உள்பட 6 பேர் அங்கம் வகிக்கிறார்கள்.

இதே போல் காயம், நோய் தாக்கம், மனதளவில் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் போராடி மீண்டெழுந்து மறுவேசம் செய்து சாதிக்கும் சிறந்த ‘கம்பேக்’ வீரருக்கான விருது பிரிவில் 6 பேரில் ஒருவராக இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் படுகாயங்களுடன் உயிர் தப்பிய ரிஷப் பண்டுக்கு காலில் சிகிச்சை செய்யப்பட்டு ஓராண்டு முழுவதும் ஓய்வில் இருந்தார். 629 நாட்களுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியதோடு, பங்களாதேஷூக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்து கவனத்தை ஈர்த்தார். அதனால் அவரது பெயர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article