நடிகர் ரஜினிகாந்தின் 171ஆவது திரைப்படமான ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத் மற்றும் பாங்கொக் ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில்
மீதமிருக்கும் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவில் இதுதொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமானது ஓகஸ்ட் மாதம் 10ஆந் திகதி அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் எனஎதிர்கார்க்கப்படுகின்றது.