இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மாவும் அதிகாரப்பூர்வமாக பிரிந்துவிட்டனர்.
அவர்களின் விவாகரத்து செய்தி பல மாதங்களாக சமூக ஊடகங்களில் பரவி வந்த நிலையில் நேற்று அவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிந்துவிட்டதாகக் உறுதிபடுத்தியுள்ளனர்.
இதேவேளை நேற்று (20) பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் இவர்களின் இறுதி விவாகருத்து வழக்கு விசாரணை இடம்பெற்ற போது நீதிபதி இருவரையும் ஆலோசனை பெற அறிவுறுத்தினார்.
அதன்படி 45 நிமிடங்களுக்கு நீடித்த ஆலோசனை அமர்வுக்குப் பிறகு, இருவரும் பரஸ்பர ஒப்புதலுடன் பிரிந்து செல்ல விரும்புவதாக நீதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கினார்.