கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (ஐ.எம்.எல்) ரி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் குமார் சங்கக்கார தலைமையிலான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகும் குறித்த தொடரில் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய 06 அணிகள் மோதுகின்றன. மார்ச் 16ஆம் திகதிவரை இந்தியாவின் 03 மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்திய அணியின் தலைவராக சச்சின் டெண்டுல்கரும் அவுஸ்திரேலியாவின் தலைவராக ஷேன் வொட்சனும் இங்கிலாந்து தலைவராக இயோன் மோர்கனும் வெஸ்ட்இண்டீஸ் தலைவராக பிரையன் லாராவும் தென்னாபிரிக்க அணியின் தலைவராக ஜாக் காலிஸூம் நியமிக்கப்பட்டுள்ளனர்.