அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து எட் ஜோய்ஸ் விலகவுள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தகுதிக் காண் சுற்றுக்குப் பின்னர் அவர் அந்த பதவியிலிருந்து விலகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
6 ஆண்டுகளாகக் குறித்த பதவியில் உள்ள எட் ஜோய்ஸ், அணியுடனான தமது ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான பயிற்றுவிப்பாளராக இருந்த எட் ஜோய்ஸ் 2019ஆம் ஆண்டு அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.