தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டாராக வலம் வரும் நடிகர் சிரஞ்சீவி. இவருக்கு ஆந்திரா தெலுங்கானாவில் பல இலட்சம் ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவி பிரஜ்ஜா ராஜியம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். சினிமாவில் மெகா ஸ்டாராக விளங்கிய நடிகர் சிரஞ்சீவியால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை.
இதனால் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து விட்டு எம்.பி.யாக இருந்தார். அதன்பிறகு நடிகர் சிரஞ்சீவி அரசியலில் ஈடுபடவில்லை .
இந்த நிலையில் நேற்று (11) பிரம்மானந்தம் என்ற திரைப்பட வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்து கொண்டார்.
அங்கு கருத்துத் தெரிவித்த சிரஞ்சீவி
ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதன் வெளியீட்டு விழாவும் முக்கியம். அப்போதுதான் அந்த திரைப்படம் ரசிகர்களை விரைவாக சென்றடையும்.
நான் அரசியலுக்கு திரும்புவேன் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் தனது வாழ்நாள் முழுவதும் சினிமாவிற்காக அர்ப்பணிக்க உள்ளேன். மீண்டும் நான் அரசியலுக்கு வர மாட்டேன். சினிமா சேவைகளுக்காக மட்டும் அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்பேன். என்று கூறினார்.