பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது.
லாகூரில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. இந்நிலையில் தென்னாபிரிக்கா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ஓட்டங்களை குவித்தது. அதிகபட்சமாக அறிமுக வீரர் மேத்தியூ பிரீட்ஸ்கே 150 ஓட்டங்களை விளாசி தோல்வியடைந்தார்.
இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றிலேயே அறிமுகமான முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் 150 ஓட்டங்களை விளாசிய ஆபிரிக்கா வீரர் மேத்தியூ பிரீட்ஸ்கே வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக 1978 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெய்ன்ஸ் அடித்த 148 ஓட்டங்களை தான் அறிமுக ஒருநாள் போட்டியில் ஒருவர் அடித்த அதிகபட்ச ஓட்டங்கள் இருந்து வந்தது. கிட்டத்தட்ட 47 ஆண்டுகால சாதனையை முறியடித்து மேத்தியூ பிரீட்ஸ்கே வரலாற்று சாதனை படைத்துள்ளார்.