19.6 C
Scarborough

முத்தரப்பு கூட்டுறவு வடகொரியாவுக்கு அச்சுறுத்தல் : கிம் ஜோங் உன்

Must read

அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் கூட்டுறவு வடகொரியாவுக்கு மோசமான அச்சுறுத்தலாக உள்ளது என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா உடனான உறவை வடகொரியா கைவிட்டுள்ளது. இந்தச் சூழலில், வடகொரியாவின் அணு ஆயுதங்கள் கையிருப்பை அதிகரிப்பதிலும், அந்த ஆயுதங்களை நவீனமயமாக்குவதிலும் கிம் ஜோங் உன் கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்குப் பதிலடி அளிக்கும்விதமாக, அமெரிக்காவும் தென்கொரியாவும் தங்கள் இராணுவ கூட்டுப் பயிற்சிகளை விரிவுபடுத்தியுள்ளன. அத்துடன் அந்நாடுகளுடன் ஜப்பான் இணைந்து மேற்கொள்ளும் பாதுகாப்புப் பயிற்சியும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சிகள் தம் மீது படையெடுப்பதற்கான ஒத்திகையாக உள்ளது என்று வடகொரியா விமா்சித்து வருகிறது.

இது தொடர்பாக வடகொரிய தலைநகா் பியாங்கியாங்கில் அந்நாட்டு இராணுவத்தின் 77ஆவது ஆண்டு நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு கிம் ஜோங் உன் கூறியதாவது:

“ நேட்டோ போன்ற பிராந்திய இராணுவக் கூட்டமைப்பை ஏற்படுத்த அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் முத்தரப்புப் பாதுகாப்பு கூட்டுறவு உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இரகசியத் திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கூட்டுறவு, கொரிய தீபகற்பத்தில் இராணுவ ரீதியில் சமநிலையற்றத்தன்மை ஏற்பட வழியமைக்கிறது. இந்தக் கூட்டுறவு வடகொரியாவுக்கு மோசமான அச்சுறுத்தலாக உள்ளது. அணு ஆயுதங்களை மேலும் அதிகமாகத் தயாரிக்கும் வடகொரியாவின் அசைக்க முடியாத கொள்கை நீடிக்கும் “ என்று  கூறினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article