ஒன்பதாவது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகும் நிலையில் தொடருக்கான நடுவர்கள் குழாம் ஐ.சி.சியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 12 கள நடுவர்கள் மற்றும் 3 போட்டி மத்தியஸ்தர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நடுவர்கள் குழுவில் இந்தியாவின் முன்னணி நடுவர் நித்தின் மேனன் இடம்பெற வேண்டும் என ஐ.சி.சி. விரும்பியது. எனினும் தனிப்பட்ட காரணங்களுக்காக பாகிஸ்தான் பயணிப்பதில்லை என முடிவு செய்திருப்பதாக நித்தின் மேனன் ஐ.சி.சி.யிடம் கூறியுள்ளார். அவரது இந்த முடிவை ஐ.சி.சி.யும் ஏற்றுக் கொண்டதால் அவர் நடுவர்கள் குழாமில் இடம்பெறவில்லை.
இதில் இலங்கையைச் சேர்ந்த நடுவர் குமார் தர்மசேன மற்றும் போட்டி மத்தியஸ்தர் ரஞ்சன் மடுகல்லே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கள நடுவர்கள் பட்டியல்
குமார் தர்மசேன (இலங்கை), கிறிஸ் கேப்னி (நியூசிலாந்து), மைக்கேல் கோப் (இங்கிலாந்து), அட்ரியன் ஹோஸ்ட்ஸ்டாக் (தென்னாபிரிக்கா), ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து), ரிச்சர்ட் கெட்டில்பரோ (இங்கிலாந்து), அஹ்சன் ராசா (பாகிஸ்தான்), பால் ரீபெல் (அவுஸ்திரேலியா), ஷர்புடோலா இப்னே ஷாகித் (பங்காளதேஷ்), ரோட்னி டக்கர் (அவுஸ்திரேலியா), அலெக்ஸ் வார்ப் (இங்கிலாந்து), ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்)
போட்டி மத்தியஸ்தர்கள் பட்டியல்
டேவிட் பூன் (அவுஸ்திரேலியா), ரஞ்சன் மடுகல்லே (இலங்கை), ஆண்ட்ரூ பைக்ராப்ட் (சிம்பாப்வே).