இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை பி.சி.சி.ஐ வழங்கவுள்ளது.
இந்திய அணிக்காக டெஸ்ட்டில் 200 போட்டிகளும் ஒருநாளில் 463 போட்டிகளிலும் ஒரு ரி20 போட்டிகளிலும் விளையாடி அதிக டெஸ்ட் மற்றும் ஒருநாள் ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை சச்சின் படைத்துள்ளார்.
இந்நிலையில், இந்திய அணிக்காக பல சாதனைகள் படைத்த சச்சினுக்கு 2024ஆம் ஆண்டின் சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை பி.சி.சி.ஐ வழங்கவுள்ளது.
மும்பையில் நாளை நடைபெறும் பி.சி.சி.ஐ இன் ‘நமன்’ விருதுகள் நிகழ்ச்சியில் இந்த விருது அவருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.