12.9 C
Scarborough

கபாலி திரைப்படத்தின் தயாரிப்பாளர் உயிர்மாய்ப்பு!

Must read

தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான கே.பி.சவுத்ரி தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
நீண்டநேரமாக அவரது இல்லத்தின் கதவு மூடப்பட்ட நிலையில் காணப்பட்டதால், சந்தேகமடைந்த அயலவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவர் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவர் தமிழில் ரஜினி நடித்து வெளியான கபாலி படத்தை தெலுங்கில் தயாரித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article