இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற 47ஆவது அகில இந்திய மறைந்த ஸ்ரீ ராஜீவ் காந்தி 19 வயதுக்குட்பட்டோருக்கான பகலிரவு ரி20 லீக் கிரிக்கெட் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை ஆர்.சி.சி. அணிக்காக வாழைச்சேனையைச் சேர்ந்த மாணவன் முஹம்மட் சித்தீக் அப்துல் மலிக் விளையாடுகிறார்.
இவர் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் (2022 சாதாரண தரப்பிரிவு) மாணவர் ஆவார். இந்தத் தொடரில் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஜே.எம்.முஹம்மட் றிஸ்வான், ஆர்.சி.சி. பயிற்றுவிப்பு பணிப்பாளராகவும் செயற்பட்டு கொண்டிருக்கின்றார்.