சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. இந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரன் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
இப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் 100ஆவது படமாகும். அதுமட்டுமன்றி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்பே இந்தப் படத்தின் தலைப்பு ‘பராசக்தி’ என்ற தகவல் வெளியாகிவிட்டது.
சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான பெப்ரவரி 17ஆம் திகதி டைட்டில் டீசர் வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டு பணிகளைத் தொடங்கியது. ஆனால், படத்தின் தலைப்பு வெளியாகிவிட்டதால் இப்போதே டைட்டில் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.