இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ‘தளபதி 69’ படத்தின் பெர்ஸ்ட் லுக்குடன் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
படத்தின் பெர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் விஜய் வாகனத்தின் மீது நின்று கொண்டு அவரது ரசிகர்களுடன் செல்பி எடுப்பது போல் காட்சி அமைந்துள்ளது
இந்நிலையில் ‘ஜன நாயகன்’ படத்தின் 2ஆவது லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ‘நான் ஆணையிட்டால்..’ என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது.
அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.