முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் மைக்கல் கிளார்க் வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்றதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
உலகக் கிண்ணத்தை வென்ற முன்னாள் அணித்தலைவர் மைக்கல் கிளார்க் ஆஸி. வாழ்நாள் சாதனையாளர் விருதுதைப் பெற்ற 64ஆவது நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் விழா இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இது குறித்து கிரிக்கெட் அவுஸ்திரேலியா தனது எக்ஸ் பக்கத்தில்,
“8,600 டெஸ்ட் ஓட்டங்கள், 28 சதங்கள், சிட்னியில் முச்சதம் அடித்த ஒரே வீரர். முன்னாள் ஆஸி. அணி தலைவர் மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளது.
12 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் டெஸ்ட்டில் 8,643 ஓட்டங்களும் , ஒருநாள் போட்டிகளில் 7,981 ஓட்டங்களும் எடுத்துள்ளார். டெஸ்ட்டில் 49.10, ஒருநாள் போட்டிகளில் 44.58 சராசரி வைத்துள்ளார்.
சிட்னியில் அதிகபட்சமாக 329 ஓட்டங்கள் அடித்து அசத்தினார். 35 டெஸ்ட் இங்கிலாந்துடனும் 22 டெஸ்ட் இந்தியாவுடனும் விளையாடி 56க்கும் அதிகமாக சராசரி வைத்திருக்கும் வீரர் மைக்கேல் கிளார்க்.
43 வயதாகும் கிளார்க் 2013/14 சீசனில் 5-0 என ஆஷஸ் தொடரினையும் 2015இல் ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்றது மறக்க முடியாத நிகழ்வாக இருக்கிறது.